aby

ஐஸ்

கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
மிக எளிய பயிற்சி. செய்முறை விளக்கமும் உண்டு.
பெண்களுக்கு பெண்களால் கற்றுத்தரப்படும்.
மிகக் குறைந்த கட்டணம். கவிதை பத்து நிமிடத்தில் வரவில்லை எனில் காசு திரும்ப தரப்படும். இந்த விளம்பரத்தை மின் அஞ்சல் செய்பவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ரசிகன்

எம்மிடம் பயிற்சி பெற்ற சிலரின் கருத்துக்கள்
"என்னால நம்பவே முடியல. பத்து நிமிடத்தில் கத்துக்குடுத்துட்டாங்க. அங்க கத்துக்கிட்டு நான் எழுதுனதுதான் ராமாயணம்".
-கம்பர்

"எனக்கு ஹைக்கூ எழுத கத்துக்குடுத்தாங்க. பத்தே நிமிடம்தான்.1330 ஹைக்கூ எழுதி திருக்குறள்னு புக்கே போட்டுட்டேன்னா பார்த்துக்குங்க.
- திருவள்ளுவர்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுட்டபழத்தை புதுப்பித்துள்ளேன்.

இனி சுட்டபழம் சூடாகவே இருக்கும்.

நான் படித்த, பார்த்த, கேட்ட விசயங்களை இனி இதில்

தங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

நடிகைகள் மட்டும் பாவமா?

ஸ்டேஷன் பெஞ்சில் ராம்கி "பட்டங்களுக்காக அலைபவர்கள்" என்று போட்ட பதிவுக்கு
பின்னூட்டமிட்ட தாணு "நாயகர்கள் பட்டங்களுக்கு அலைவதுபோல் நாயகிகள் அலைந்தால்??!!
யார் யாருக்கு என்ன பட்டம் பொருத்தம்னு காமெடியா ஒரு பதிவு போட்டிருக்கலாம்.
ராம்கிக்கு காமெடி வருமா?" என்று கேட்டிருந்தார். எனக்கு காமெடி வருமா என்று தெரியவில்லை?
ஆனால் நடிகைகள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இதோ நான் வழங்கும் பட்டங்கள்!
"கற்புச்செல்வி" குஷ்பு.
"சாதனைப் பெண்" ராதிகா. (மூன்று திருமணங்கள் செய்துகொள்வது சாதனைதானே?)
"இளைய புன்னகை அரசி" சினேகா.
"கோழி தாரா" நயன்தாரா. (சிக்கன் ஐட்டம் எதையும் விட்டுவைக்கமாட்டாராம். பட்டம் உபயம் நக்கீரன்)
"இஞ்சி இடுப்பழகி" சிம்ரன்.
"கண்ணழகி" மீனா.
"அரேபிய குதிரை" நமீதா. (அவரே சொன்னது "நான் குதிரை மாதிரி, ஆனா குழந்தை மனசு)
பட்டியல் தொடரும்.
.

ஹோமியோபதியும் பல்லி மிட்டாயும்

ஹோமியோபதி மருத்துவம் என்பது சும்மா உட்டாலங்கடி வேலை என்பதாகவும்,ஹோமியோபதி மருந்து சாப்பிடுவதும், பல்லி மிட்டாய் சாப்பிடுவதும் ஒன்றுதான்என்பதாகவும் பிரிட்டிஷ் மருத்துவ இதழான 'லான்செட்'இல்(பல்லி மிட்டாயெல்லாம்நம்ம பாஷை கண்டுக்காதீங்க) ஆராய்ச்சி கட்டுரை வந்திருப்பதாக ஜீனியர் விகடன்செய்தி வெளியிட்டுள்ளது. என் அனுபவத்தில் ஹோமியோபதி மருத்துவத்தில் பூரணநிவாரணம் கிடைத்துள்ளது. எனக்கு 10 வயதில் டைபாய்டு காய்ச்சல் வந்த போதுஹோமியோபதி மருத்துவத்தின் மூலமாகத்தான் குணமடைந்தேன். மீண்டும் இன்றுவரை டைபாய்டு காய்ச்சல் வந்ததில்லை. அது போல் என் தங்கைக்கு ஆஸ்துமாநோய் குணமாகியுள்ளது. ஆனால் அலோபதி மருத்துவத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மிகமோசமானது. மார்பில் சளிகட்டி நான் சிரமப்பட்டபோது அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு எனக்கு சளியிலிருந்து(தற்காலிக)நிவாரணம் கிடைத்தது. பின்பு எனக்கு பார்வை குறைவு ஏற்பட்டது தனிக்கதை.அலோபதி மருத்துவம் என்பது உடனடி நிவாரணம், ஆனால் பக்கவிளைவு நிச்சயம்.(வாலு போயி கத்தி வந்த கதைதான்) அலோபதி மருத்துவத்தில் எந்த வியாதிக்கும்நிரந்தர நிவாரணம் இருப்பதாகத் தெரியவில்லை. மேலை நாடுகளில் மக்கள் இப்போதுமூலிகை மருந்துகளை நாடத்தொடங்கியுள்ளனர். (நம்ம ஊரு வேப்பிலைக்கும், மஞ்சளுக்கும்அடாவடியாக அவர்கள் காப்பிரைட் வாங்கியது தனி கிளைக்கதை). இதனால் அலோபதி மருத்துவர்களுக்கு கிலி பிடித்துக்கொண்டது. அதனால்தான் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா எல்லாம் சுத்த ஹம்பக் என்று ஜல்லியடிக்கிறார்கள்.

சுட்ட பழம் 2

"தலைவர் இன்னும் சினிமாவ மறக்கலே?"

"எதை வச்சு சொல்றே?"

"அங்கே பாரு... தலைவர் மகளிர் அணி தலைவி தொப்புள்ள ஆம்லெட் போடறாரு."

-கல்லூரி ராமன்.
(நன்றி ஆனந்த விகடன்)

(மன்னிக்கவும் தொப்புள் (ி) படம் கிடைக்கவில்லை)

சுட்டபழமும் சுடாதபழமும்

மனிதன் இப்ப மன இருக்க நோய், மன அழுத்த நோய்னு நொந்து நூலாய்க்கிட்டு இருக்கான். ஏதோ என்னாலான உதவியா இந்த வலைப் பூவுல நான் வார இதழ்கள்ல படித்த, கடித்த ஜோக்குகள சுட்டு தரப்போறேன். கண்டிப்பா எதுல சுட்டேன், யார்கிட்ட சுட்டேன்னு போட்டுருவேன்.இன்னைக்கு சோதனை முயற்ச்சியா முதல் ஜோக்

மளிகை கடைக்காரர்வந்திருக்காக....
வாடகை பாக்கிக்குவந்திருக்காக.....
மற்றும்
போனவாரம் கொடுத்தபணத்துக்கு
நானும்வந்திருக்கேன்.....
மின்னல் மாதிரி மறையாம
கதவத் திறந்துவெளிய வாப்பா சந்துரு......!
-த.சிவக்குமார், சமத்தூர்.(நன்றி ஆனந்த விகடன்)

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads