கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
மிக எளிய பயிற்சி. செய்முறை விளக்கமும் உண்டு.
பெண்களுக்கு பெண்களால் கற்றுத்தரப்படும்.
மிகக் குறைந்த கட்டணம். கவிதை பத்து நிமிடத்தில் வரவில்லை எனில் காசு திரும்ப தரப்படும். இந்த விளம்பரத்தை மின் அஞ்சல் செய்பவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ரசிகன்

எம்மிடம் பயிற்சி பெற்ற சிலரின் கருத்துக்கள்
"என்னால நம்பவே முடியல. பத்து நிமிடத்தில் கத்துக்குடுத்துட்டாங்க. அங்க கத்துக்கிட்டு நான் எழுதுனதுதான் ராமாயணம்".
-கம்பர்

"எனக்கு ஹைக்கூ எழுத கத்துக்குடுத்தாங்க. பத்தே நிமிடம்தான்.1330 ஹைக்கூ எழுதி திருக்குறள்னு புக்கே போட்டுட்டேன்னா பார்த்துக்குங்க.
- திருவள்ளுவர்


4 comments:

said...

ரசிகனுக்கும் சுட்ட பழத்துக்கும் என்ன அக்ரிமெண்டு - சொல்லவே இல்லயே !!

said...

// எம்மிடம் பயிற்சி பெற்ற சிலரின் கருத்துக்கள்//
ஹா..ஹா.. ரொம்பவே ரசித்தேன் நக்கீரரே..உங்கள் விளம்பர திறமையை..
(ஆமா அவ்வையார ஏன் விட்டுடீங்க..அவிங்க நீளமா கைத்தடி வைச்சிருக்கிறதனாலையா?..ஹிஹி..)
நல்லாயிருக்குங்க.. உங்க கற்பனை..

said...

இதை இப்போதுதான் ..எங்கேயோ படித்தமாதிரி இருக்கிறதே. -அவர்கள்?

சீனா அவர்களே.எனக்கும் இந்த சந்தேகம் உண்டு.haa.haa.
எப்படியோ நக்கீரர் ரசிகனின் பதிவில் தன் சுட்டியை சேர்த்து விட்டார்.அதுதான் ஒப்பந்தம்.
புத்திசாலிதான்.
கிழே பாருங்கள்.
' Web Pages referring to this page
அவர்கள்.....?: பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்
சுட்டபழம்'
நல்ல நகைச்சுவையாக எழுதுகிறார்கள் இரண்டு நண்பர்களும்.

' (ஆமா அவ்வையார ஏன் விட்டுடீங்க..அவிங்க நீளமா கைத்தடி வைச்சிருக்கிறதனாலையா?..ஹிஹி..)'
ரசிகனின் லொல்லு வந்த இடத்திலுமா?.haa.haa.

said...

சீனா சார் & பிரித்திக்கு..,

C I D கணக்காவே திங்க பண்ணரீங்களே..ரெண்டு பேரும் சேந்து ,பார்ட் டைமா ஏதாவது டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தரீங்களோ?..ஹிஹி..
பிரித்தி நீங்க சொன்னமாதிரி நண்பருக்கு கற்பனை திறமை இருக்கு.. என்னோட கம்பெனிக்கு விளம்பரத்துக்கு அவரத்தான் கூப்பிடலாமுன்னு இருக்கேன்..ஹிஹி..

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads